ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ச 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு: நாமல் ராஜபக்ச 18 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
...................
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வானூர்திகளை கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
அங்கு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்சவை, இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
