Breaking News

நள்ளிரவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீடு புகுந்து தாக்குதல், பொருட்களுக்கு சேதம், 12:55 க்கு கைது. 7:00 மணிக்கு பிணை


நள்ளிரவில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீடு புகுந்து தாக்குதல், பொருட்களுக்கு சேதம், 12:55 க்கு கைது. 7:00 மணிக்கு பிணை 



யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு, வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர்.


119 அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த நெல்லியடி போலீசார் குறித்த நபரை கைது அதிகாலை 12:45 மணியளவில் கைது செய்திருந்த நிலையில் காலை 7:00 மணியளவில் அவரை அரசியல் அழுத்தம் காரணமாக பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர்.  


எதிர்வரும் 01/09/2026 அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறே பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து ஆச்சுறுத்தி பொருட்கலுக்கு சேதம் விழைவித்த ஒருவருக்கு போலீசாரால் பிணை வழங்க முடியாது என்றும் போலீஸ் பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.