மாமுனை தம்பலகாமம் அபாய வெளியேற்ற பாதையினை நேரில் பார்வையிட்ட ரஜீபன்.......!
மாமுனை தம்பலகாமம் அபாய வெளியேற்ற பாதையினை நேரில் பார்வையிட்ட ரஜீபன்.......!
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக மட்ட பிரதிநிதி ஒருவரால் மாமுனை தம்பலகாமம் அபாய வெளியேற்ற பாதையினை புனரமைப்பு செய்யாத காரணத்தால் வடமராட்சி கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்து உரைக்கிபட்டது
இதன் போது குறித்த வீதியின் பதிவு மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அபிவிருத்தி குழு கூட்டம் நிறைவு பெற்றதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் மற்றும் அவரின் குழுவினர் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்களர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்
பின்னர் மிக விரைவில் இதன் அபிவிருத்தி மற்றும் பதிவு நடவடிக்கை செய்யப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது
