70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்
70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்
..........
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான 2026 ஆகஸ்ட் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று (03) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 618,352 பயனாளிகளுக்காக சுமார் 309 கோடி ரூபாயும் (ரூ. 3,091,760,000), இரண்டாம் கட்டத்தின் கீழ் 78,260 பயனாளிகளுக்காக சுமார் 39 கோடி ரூபாயும் (ரூ. 391,300,000) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தகுதியான முதியோர்கள் இன்று முதல் தத்தமது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலமாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
