நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பு!
நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு பண்பாட்டு நிகழ்வுகள் சிறப்பு!
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 23.08.2026 அன்று ஆரம்பிக்கப்பட்ட பண்பாட்டு நிகழ்வின் நான்காம் நாள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி பாராட்டினார்.
இதன்போது, ஒயிலாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற குழுவினரின் சிறப்பான நடன நிகழ்வுடன், பல்வேறு பாரம்பரிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன், சிவலீம் சிலம்பக் கலையகத்தின் சிலம்பு வீர விளையாட்டு நிகழ்வும் பார்வையாளர்களை கவர்ந்தது.
பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளைய தலைமுறையினரின் கலைத்திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது.
