Breaking News

யாழ்ப்பாணத்தில் கோல்டன் நிறுவனத்தின் 31வது கிளை திறப்பு - வடக்கின் உற்பத்திகளை உலகுக்கு கொண்டு செல்ல புதிய மைல்கல்! .......

 யாழ்ப்பாணத்தில் கோல்டன் நிறுவனத்தின் 31வது கிளை திறப்பு - வடக்கின் உற்பத்திகளை உலகுக்கு கொண்டு செல்ல புதிய மைல்கல்!

.......


வடமாகாண மக்களின் வணிக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், புகழ்பெற்ற கோல்டன் நிறுவனத்தின் (Golden) 31ஆவது கிளை யாழ்ப்பாண நகரில் இலக்கம் 567- 2C வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.


முன்பதாக புகையிரத நிலைய சந்தியில் இருந்து விருந்தாளர்கள் மங்கல வாத்தியங்களுடன் ஊர்வலமாக பிரதான நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட நிலையில் புதிய கிளை அலுவலகத்தை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாகத் திறந்துவைத்தார்.


"வடக்கின் உற்பத்திகளை உலகுக்கு கொண்டு செல்வோம்" என்னும் உன்னத தொனிப்பொருளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கிளையானது, இப்பகுதி தொழில்முனைவோருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புதிய பரிமாணத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய கிளை திறப்பு விழாவில் சர்வமதத் தலைவர்கள், உள்ளூர் வர்த்தகர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர். 


விழாவின் சிறப்பம்சமாக, வடக்கின் பாரம்பரிய மற்றும் நவீன உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி, உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்த அறிமுகமும் இடம்பெற்றது.


இந்த கிளை ஊடாக, யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியிலும் இது முக்கிய பங்காற்றும் என நிறுவனத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000