Breaking News

இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த அமலா ஷாஜி.

 இன்ஸ்டாகிராமில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த அமலா ஷாஜி.



இளம் வயதிலேயே இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் பின்தொடர்பவர்களை அவர் கொண்டுள்ளார்.


இந்தநிலையில் ‘சிறை’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 26ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


குறித்த திரைப்படத்தில் கதாநாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார்.


இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா ஷாஜி, “சிறிய தொடக்கமாக இருந்தாலும், சிறப்பான தொடக்கம்” என நெகிழ்ந்துள்ளார்.


அவரது ரசிகர்கள் அனைவரும் அமலா ஷாஜியின் இந்தத் தொடக்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


#amalasaji #instagram #newmovie #vikramprabu #kollywood #sooriyannews #Srilanka #TruthAtAllCosts