இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society – EDCS) புதிய அலுவலகம் இன்று (29) சாவகச்சேரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் கல்வித்துறை ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வரும் கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் (Education Co-operative Society – EDCS) புதிய அலுவலகம் இன்று (29) சாவகச்சேரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இது இலங்கையில் திறக்கப்பட்டுள்ள 26ஆவது கல்விக் கூட்டுறவுச் சங்க அலுவலகமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகமாகவும் அமைந்துள்ளது.
சாவகச்சேரியில் நடைபெற்ற அலுவலகத் திறப்பு நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ. லால்குமார் மற்றும் பொது முகாமையாளர் சந்தன குணசேகர ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பணியாற்றும் கல்வித்துறை ஊழியர்களுக்கு கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் சேவைகளை தமது பிரதேசத்திலேயே இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை இந்த புதிய அலுவலகம் ஏற்படுத்தியுள்ளது.
கல்வித்துறை ஊழியர்களின் நலன், பொருளாதார மேம்பாடு மற்றும் அவர்களுக்கான கூட்டுறவுச் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிராந்திய மட்டத்தில் இவ்வாறான அலுவலகங்கள் அமைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் ஆசிரியர் சேவைச் சங்கப் பிரதிநிதிகள், கல்விக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
