Breaking News

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

 லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!



இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


புதிய விலை விபரம் வருமாறு:


இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.


 இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.


அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.