ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் விரிவுபடுத்த நடவடிக்கை!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் விரிவுபடுத்த நடவடிக்கை!
============
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனிதவள மற்றும் எமிரேட்மயமாக்கல் அமைச்சர் டொக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவாரை சந்தித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சந்திப்பில் இருதரப்பு தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து ஆராயப்பட்டது.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நலன், கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு இக்கலந்தரையாடலின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
