Breaking News

திருத்திய செய்தி - ஒருமைபாட்டிற்கான நற்செய்தி மையத்தின் புதிய இணைத்தலைவர்

 திருத்திய செய்தி - ஒருமைபாட்டிற்கான நற்செய்தி மையத்தின் புதிய இணைத்தலைவர்




தென்னிந்திய திருச்சபை செனட் மாமன்றத்தின் முன்னால் தலித் மற்றும் ஆதிவாசி துறை இணை இயக்குணரும்,குருக்கள் லூத்தரன் இறையியல் கல்லூரி, சென்னையில், பழைய ஏற்பாட்டு இறையியலில் தனது இறையியல் முதுகலை (Master of Theology in Old Testament) படிப்பைத் தொடரும் அருட்பணி. ஜெபசிங் அவர்கள், ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கார்ட் நகரில் இயங்கும் ஒற்றுமைக்கான நற்செய்தி மையத்தின் (Evangelical Mission in Solidarity - EMS) நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவராக (Head of Unit – India) நியமிக்கப்பட்டுள்ளார் .


ஜெர்மனியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் CSI, CNI ஆகிய இரு பேராயங்களின் செனட் தலைவர்களுடன் நடைபெற்ற விரிவான நேர்காணல்களுக்குப் பிறகு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது அர்ப்பணிப்பு, இறையியல் ஆழம் மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

தென்னிந்திய திருச்சபையின் உலகளாவிய மிஷன் பணிகள், கல்வி, சமூக மேம்பாடு மற்றும் பல கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவற்றில் கடந்த காலத்தில் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாடுகளின் அடிப்படையில், இந்த நிறுவனத்துடன் பலமான மற்றும் நீண்டகால கூட்டாண்மையை இது கொண்டுள்ளது. அருட்பணி. ஜெபசிங் அவர்களின் நியமனம், இந்தக் உறவை மேலும் பலப்படுத்தி, இந்தியாவான் அனைத்து மாநிலஙகளிலும் , மற்றும் இலங்கை, தாய்லாந்து,பாக்கிஸ்தான், பர்மா, பங்களாதேஷ் என தென்னாசிய முழுவதும் சமூகங்களுக்குஇடையில் புரிதலான சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்கால மிஷன் முயற்சிகளை மேம்படுத்தும்.

 தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க், பொதுச் செயலாளர் அட்வ.ச. பெர்னாண்டஸ் ரத்தின ராஜா மற்றும் பொருளாளர் பேராசிரியர் Dr. விமல் சுகுமார் ஆகியோரால் அவர் கடந்த வாரம் கௌரவிக்கப்பட்டார். எதிர் வரும் ஏப்ரல் மதத்தால் இதன் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்வார். அருட்பணி. ஜெபசிங் அவர்கள் யாழ்ப்பாணதென்னிந்திய திருச்சபையின் குருவானவர்களில் ஒருவர் என்பதுடன் நெடுந்தீவு, கொழும்பு , வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் அருட்பணியாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.