மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட வருடாந்த மாசிமக விரத உற்சவம்
மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட வருடாந்த மாசிமக விரத உற்சவம்
பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலய மாசிமக விரத உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (02.03.2026) சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
காலை விசேட பொங்கலைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகியது. பிற்பகல்-01.15 மணியளவில் விசேட பூஜை, மடை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.
மேற்படி ஆலயப் பிரதமகுரு நடேசன் குகநாதன் மாசிமக விரத உற்சவக் கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினார்.
இதேவேளை, கிராமிய வழிபாடு இன்றுவரை அழியாது பின்பற்றப்பட்டு வருகின்ற ஈழத்து ஆலயங்களில் இவ் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கின்றது.
வயல்களின் நடுவே சிறியதொரு ஆலயமாக இயற்கை அழகுற அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நித்திய பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன் வருடாந்தம் மாசிமக விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
