சுமூகமான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு தவிசாளர் யுகதீஸ் பாராட்டு வ
சுமூகமான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு தவிசாளர் யுகதீஸ் பாராட்டு
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சுமூகமாக நடைபெற்றதற்கு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் நன்றி தெரிவித்துள்ளார்
நீண்ட காலமாக இடம்பெறாமல் இருந்த வடமராட்சிக் கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் காலை 09.30 மணியளவில் இடம்பெற்றது
இதன் போது வடமராட்சி கிழக்கு மக்களுடைய பல தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி முறைகளான சுருக்குவலை, உழவு இயந்திரத்தை தடை செய்தல்,
வனஜுவிகளின் பாதுகாப்பில் இருக்கும் காணிகளை விடுவித்தல், பருத்தித்துறை மருதங்கேணி வீதியை புனரமைப்பு செய்தல், வைத்தியசாலைகளை தரம் உயர்த்துதல், மணக்காடு சவுக்கம் காட்டை பாதுகாத்தல், பேருந்து சேவைகளை விரிவுபடுத்துதல், இன்னும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது
சில தேவைகளுக்கான தீர்வுகள் இந்த கூட்டத்தில் சுமூகமாக எட்டப்பட்டது
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சுமூகமாக எந்தவொரு குழப்பங்களும் இன்றி நடைபெற்றதற்கு பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஷ் நன்றி தெரிவித்துள்
ளார்
