நெல்லியடிக்கு கடற்தொழில் நிரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரம் விஐயம்..!
நெல்லியடிக்கு கடற்தொழில் நிரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரம் விஐயம்..!
நாடு முழுவதும் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 20 நகரங்களின் அபிவிருத்தி திடடத்தின் கீழ் நெல்லியடி நகரமும் மானிப்பாய் நகரமும் அபிவிருத்தி செய்யப் படவுள்ளன. இதற்கான கள ஆய்விற்காக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரம் இன்றையதினம் நெல்லியடி பேருந்து தரிப்பிடம் உட்பட நெல்லியடி நகரை நேரடியாக பார்வையிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், நெல்லியடி வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலருடனும் நெல்லியடி நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இதேவேளை கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் நெல்லியடி பேருந்து தரிப்பிடம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரின் முன்னாயத்த ஆய்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களான கணேசரூபன், நிதர்ஷன், கவியரசி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
