Breaking News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்.....!




அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்.....!



கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை முழுவதும் இயற்கை அனர்த்தத்தால் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதிகமான பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அரச சார்பற்ற மற்றும் அரச சார்பான நிறுவனங்கள் பல உதவிகள் அனர்த்த காலத்திலும் அனர்த்தம் ஓய்வு நிலையை அடைந்த பின்னரும் தொடர்ந்து செய்து வருகின்றனர் 

அந்த வகையில் நேற்றைய தினம் (2) வடமராட்சி கிழக்கில் அதிகம் பார்க்கப்பட்ட குடும்பங்களை தெரிவு செய்து வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் யகத் துஷியா என்பவரின் நிதி அனுசரணையில் 40 ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது 

இதன் போது பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது