Breaking News

ஈரான் அரசு தொலைக்காட்சி, நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் உயிரிழந்ததாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

 ஈரான் அரசு தொலைக்காட்சி, நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் உயிரிழந்ததாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும், தாக்குதல்களில் உயர்மட்ட தலைமை இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.


ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களின் தகவல்படி, ஈரான் அரச ஊடகங்களே அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

1989 முதல் ஈரானின் உயர்ந்த அரசியல் மற்றும் மத அதிகாரியாக இருந்த காமெனெயின் மரணம், நாட்டின் தலைமை அமைப்பிலும் பிராந்திய அரசியலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நிகழ்வாக மதிப்பிடப்படுகிறது.