வீதியோரத்தில் நிற்கும் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யும் மருதங்கேணி பொலிசார் அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள்......!
வீதியோரத்தில் நிற்கும் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யும் மருதங்கேணி பொலிசார் அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள்......!
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் இரவு நேரங்களில் வீதியோரங்கள்,ஆலயமுன்றல்கள் மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் நிற்கும் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் அழைத்து சென்று ஆள் பிணையில் விடும் அநாகரிக செயற்பாடு வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பொலிசால் அதிகளவு செய்யப்பட்டு வருகிறது
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
நேற்றைய தினம் (27/02/2026) பிற்பகல் 7 மணியளவில் மருதங்கேணி சந்தியில் இருந்து செம்பியன் பற்று பகுதிக்கு செல்லும் பகுதியில் சுமார் 100m உள்ளே மூன்று இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் அழைத்து சென்று ஐந்து மணி நேரத்திற்கு பிறகு ரூபா 50000 பெறுமதியான ஆள் பிணையில் விடுவித்துக் மன்னர்
இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரித்த போது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இல்லாத காரணத்தால் அருகாமையில் இருக்கும் கடைக்கு பெற்றோல் வாங்குவதற்கு கூட வந்த இளைஞர் சென்றதாகவும் மோட்டார் சைக்கிளுக்கு பாதுகாப்பாக அந்த இடத்தில் தான் நின்ற தாகவும் தெரிவித்துள்ளார்
மற்றய இளைஞர்கள் செம்பியன் பற்று பகுதிக்கு இரவில் கரப்பந்தாட்டம் விளையாடுவதற்கு செல்வதற்காக வரும் வாகனங்களில் ஏறி செல்வதற்கு காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
சுமார் த ஐந்து நிமிடங்கள் அதில் நிற்கும் போது மருதங்கேணி பொலிசார் என தம்மை அடையாள படுத்தி வாகனத்தில் வந்த பொலிசார் தாம் ஏன் இதில் நிற்கின்றோம் என பல தடவைகள் சொல்வதற்கு முயன்ற போது எமது கருத்துக்களை ஏற்காமல் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து வைத்து விட்டு வீட்டுக்கு அனுப்புவதாக அழைத்து சென்றுள்ளனர்
தம்மை அழைத்து செல்லும் போது மோட்டார் சைக்கிளுக்கு பாதுகாப்பாக நின்ற நபரிடம் அடையாள அட்டை இருந்ததாகவும் மற்ற நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
அழைத்து சென்ற பொலிஸார் சுமார் ஐந்து மணிநேரங்கள் எம்மை அமர்த்தி வைத்து விட்டு எமது பெயரில் வேறு எதாவது வழக்கு இருக்கிறதா என பாத்து அனுப்புவதாக கூறினார் ஏற்கனவே முடிவு பெற்ற வழக்குகள் இருந்ததாகவும் அது தொடர்பாக எந்த விதமான பிரச்சினையும் இப்போது இல்லை எனவும் கூறியுள்ளனர்
எமது நிலப்பரப்பில் எந்த குற்றமும் செய்யாமல் நாம் நின்றதுக்கு தமக்கு இந்த தண்டனையா தமது நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அடையாள அட்டைகள் உள்ள போதும் ஏன் எமக்கு இந்த ஆள் பிணை நடவெடிக்கை வீட்டை விட்டு வெளியே வரவே இந்த ஜனநாயக நாட்டில் பயமாக உள்ளது எனவும் இவ்வாறான அநாகரிக செயற்பாடுகள் இந்த ஜனநாயக நாட்டில் இடம் பெறாமல் ஆளும் தரப்புக்கள் பார்க்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்
இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினரிம் மேலதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்
