Breaking News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கில் வாழ்விடம் கொடுப்பது எமது ஜனநாயக கடமை போராளி வேந்தன் தெரிவிப்பு......!

 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கில் வாழ்விடம் கொடுப்பது எமது ஜனநாயக கடமை போராளி வேந்தன் தெரிவிப்பு......!





கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை முழுவதும் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதிகமாக இலங்கையின் மலையக பகுதி பாதிக்கப்பட்டடதுடன் பல உயிர் மற்றும் சொத்து வேதங்களும் ஏற்பட்டது 


இவ் சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு கிழக்கில் வாழ்விடம் கொடுப்பது எமது ஜனநாயக கடமை என தெரிவித்துள்ளார் 



அவர் மேலும் தெரிவிக்கையில் 


நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் பாரியளவு அழிவினை சந்தித்துள்ளது அந்த வகையில் கூடுதலாக மலையக மக்கள் பாரியளவு இழப்புக்கு முகம் கொடுத்து வருகின்றனர் 


குறிப்பாக தற்போதும் பெருந்தொகையான மலையக மக்கள் இடத்தங்கள் முகாம்களில் இருந்து வருகின்றனர் அந்த வகையில் முகாம் களில் வாழும் மக்களுக்கு அரசாங்கம் நிரந்தர வசிவிடத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கையில் உள்ளது 


அதே போன்று அவர்களுக்கான பாதுகாப்பான நிரந்தர காணியினை வழங்கி அதில் அவர்களுக்கான வீடுகளை வழங்கி அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 


அந்த வகையில் மனோ கணேசன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கூறினார் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான கானியினை ஜனாதிபதியிடம் கூறி பெற்று தருவதாகவும் இல்லை என்றால் வடக்கு கிழக்கு பகுதிகளில் மலையக மக்கள் சென்று குடியேறுவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தி தருவதாகவும் மலையக மக்களுக்கு குறிப்பிட்டுள்ளார் 


எம்மைப்பொருத்தத வகையில் மலையக மக்கள் நிர்க்கெதியாக இருக்கும் போது நாம் (தமிழ் மக்கள்)கடந்த நாட்களில் கை கொடுத்து உள்ளோம் அதே போன்றும் இன்றும் நாம் அவர்களுக்கான ஒரு பாதுகாப்பான வாழ்விடத்தை அமைத்து கொடுப்பதற்கும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வந்து குடியேறி அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு கை கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் 



குறிப்பாக வடக்கு பகுதிகளில் இருக்கும் அரச காணிகளில் அவர்களை அமர்த்துவதற்கான செயற்பாடுகளை ஆளும் அரசாங்கத்துடன் கதைத்து வெகு விரைவில் செயல்படுத்த வேண்டும் 



அதே போன்று புலம்பெயர் சேதத்தில் இருக்கும் உறவுகள் பலர் தமது காணிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க தயாராக உள்ளனர் மற்றும் அவர்களுக்கான நிரந்தர வசிவிடத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காக நாம் எல்லோரும் இன மத பேதமின்றி அனைவரும் ஒரே மக்களாக ஒன்றினைய வேண்டும் 



அது மட்டுமின்றி இந்திய அரசாங்கமும் இவ் விடயத்தில் கருத்தில் கொண்டு பூரன ஒத்துழைப்பை தர வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்