Breaking News

வடமராட்சி கிழக்கு லீக் தலைவரை பதவியில் இருந்து உடன் நீக்குமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கடிதம்

 


வடமராட்சி கிழக்கு லீக் தலைவரை பதவியில் இருந்து உடன் நீக்குமாறு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் கடிதம்



வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறுப்புரிமையில் இருந்து கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் நீக்கியுள்ளது 


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக் தலைவராக இருப்பவர் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழக உறுப்பினர் ஆவார் 


இவர் அண்மைக்காலமாக தமது கழக சட்ட திட்டங்களை மீறி முரணாக செயற்பட்டு வருவதால் தமது கழக உறுப்பினர் உரிமையில் இருந்து உடன் நீக்குவதாகவும் லீக் தலைவர் பதவியில் இருந்தும் உடன் நீக்குமாறு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட லீக்கிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்

டுள்ளது.