பச்சிளைப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு....!
பச்சிளைப்பள்ளி பகுதியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு....!
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளை பகுதியில் இன்றைய தினம் (26) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேரூந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றது
இவ் கௌரவிப்பு நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
இவ் கௌரவிப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் அவர்களும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்
