Breaking News

மருதங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து....!

 மருதங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து....!




யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் நேற்றயதினம் (10) திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது 



குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு பெண்ணும் அவரது நான்கு வயதுடைய மகனும் மருந்து எடுப்பதற்காக வைத்தியசாலை வாயில் பகுதியில் இருந்து உட் பகுதிக்கு செல்ல முயன்ற போது 


நோயாளி காவு வண்டி பின் பக்கம் நோக்கி வருகை தந்ததை அவதானித்த பெண் தனது துவிச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்ற போது பின் பக்கம் வந்த நோயாளி காவு வண்டி துவிச்சக்கர வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது 


இவ் விபத்தானது முழுக்க முழுக்க நோயாளி காவு வண்டியின் தாரதியின் அவதானிப்பு பிழையாலே இடம்பெற்றது என தெரிய வந்துள்ளது 


விபத்தின் போது காயமடைந்த நான்கு வயது சிறுவனும் தாயரும் சிகிச்சையின் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்