மாவீரர் நாளை புனிதமான நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம், மதுபான சாலைகளும் பூட்டு..!
மாவீரர் நாளை புனிதமான நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம், மதுபான சாலைகளும் பூட்டு..!
மாவீரர் நாளை ஒரு புனிதமான நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அன்றைய நாள் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான சாலைகளை மூடுவதென்றும் தீர்மானித்துள்ளது.
இன்றைய சபை அமர்வின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
2026 ம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டம் எங்களுடைய 13 உறுப்பினர்கள் ஆதரவுடனும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உண்மையில் எமது பிரதேச சபை ஆரம்பிக்கப்பட்டு முதல்முறையாக எமது சபை ஏகமனதாக வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஒரு மாற்றம், நாட்டிலே ஏற்பட்ட மாற்றம் எமது சபையிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவெ இதன் அடிப்படையில் எமது பிரதேச சபையில் அனைத்து வேலைத்திட்டங்களும் விருயவாக மேற்கொள்ளப்படும், இன்றைய தினம் எமது சபையிலே மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் மாவீரர் நாளன்று அதாவது 27 ம் திகதி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் அனைத்து மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், இது ஒரு வரவெற்கத்தக்க விடயம், எமது இனத்தினுடைய விடிவிற்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர் செல்வங்களை நினைவு கூருவதற்க்காக அன்றைய தினத்தை
ஒரு புனிதமான நாளாக நினைவு கூறுவதற்கு எமது சபை முடிவெடுத்துள்ளது.
