மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!
மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!
ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் வேலைத்திட்டம் வனபாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பித்து வைக்கப்படப்டது.
மட்டக்களப்பு மாவட்ட வன காரியாலயத்தின் ஏற்பாட்டில் பிரதேச வன உத்தியோகத்தர் ஆர்.எம்.கே.ஆர். இலுக்கும்புர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவபிரியா வில்வரட்ணம், கிழக்குப் பல்கலைக் கழக உயிரியல் பிரிவிற்கான பேராசிரியர் டாக்டர் ரீ. மதிவேந்தன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவனீதன், மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள வாவிக்கரைகளை அண்டிய சதுப்பு நிலங்களில் நடப்பட்டிருக்கும் கண்டல் தாவரங்களை அண்டிய பகுதிகளில் காணப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் மற்றும் ஏனைய குப்பைகூளங்களை அகற்றி சுத்தம் செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இப்பகுதிகளில் கண்டல் தாவரங்களின் ஒருவகையாகிய கண்ணா மரங்களை புதிதாக நடுகைசெய்யும் பணியும் இடம்பெற்து. இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரில் பீடத்தில் கல்விகற்கும் 50 இற்கு மேற்பட்ட மாணவர்கள் சிரமதான நிகழ்வுகளில் ஈடுபட்டதுடன், கண்டல் தாவரத்தினை பாதுகாத்தல், பொலித்தீன் கழிவுளை தவிர்த்தல், சுற்றாடலை மாசுபடாமல் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் தொடர்பாக மாவட்ட வன காரியாலயத்தின் உதவி பிரதேச வன உத்தியோகத்தர் லியாஉல் கக்கீம், மட்டக்களப்பு வட்டார வனக்காரியால உத்தியோகத்தர் செல்வநாயகம், வாழைச்சேனை, புல்லுமலை, மட்டக்களப்பு ஆகிய வட்டார வனக்காரியாலய உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.