Breaking News

தற்காப்பு கலையில் தேசியத்தில் வரலாற்று தடம் பதித்த மு/விநாயகபுரம் அ.த.க.பாடசாலை

 தற்காப்பு கலையில் தேசியத்தில் வரலாற்று தடம் பதித்த மு/விநாயகபுரம் அ.த.க.பாடசாலை



துணூக்காய் வலயத்திற்கு உட்பட்ட மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 2025ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட மல்யுத்தப்போட்டி 29, 30 ,31 .08.2025 மற்றும் 01.09 2025 ஆகிய திகதிகளில் ஹம்பகா உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இதில் 56 மாணவர்களினை இடைநிலைப்பிரிவில் கொண்டதுடன் மு/விநாயகபுரம் அ.த.க.பாடசாலை இரண்டு தேசிய மட்ட பதக்கங்களினை தனதாக்கியது. 


அந்த பாடசாலையை சேர்ந்த செ.யதுர்சன் மற்றும் க.லோஜினி என்பவர்கள் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். மாகாணமட்ட போட்டியில் 30பதகங்களினை தனதாக்கிய பாடசாலை கடந்த வருடம் ஒரு வெள்ளி பதகத்தினை வென்றமையும் குறிப்பிடத்தக்க

து.