Breaking News

விளையாட்டை பொறுத்தவரை கடின பயிற்சியே வெற்றிக்கு வழி சமைக்கும் - பற்றிக் டிரஞ்சன் தெரிவிப்பு!

 விளையாட்டை பொறுத்தவரை கடின பயிற்சியே வெற்றிக்கு வழி சமைக்கும் - பற்றிக் டிரஞ்சன் தெரிவிப்பு!




விளையாட்டு என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. ஏனெனில் விளையாட்டுகளின் போது உடலை வருத்தித்தான் சாதனைகளை படைக்க முடியும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார்.


தேசிய ரீதியாக நடைபெற்ற உடற்பயிற்சி போட்டியில் முதலிடம் பெற்ற புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,


சிறிய ஒரு சோம்பேறித்தனம் அல்லது உடல் வலி தொடர்பான சலனம் இந்த போட்டிகளில் இருந்து பின்வாங்க செய்துவிடும். இவ்வாறான சூழ்நிலையில் தேசியமட்ட ரீதியில் இந்த பாடசாலையானது உடற்பயிற்சி போட்டியில் முதலிடத்தை பெற்று சாதனையை படைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விடயம். 


எனவே வடக்கு மாகாண கல்வி அமைச்சு சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.


இந்தப் பாடசாலை ஒரு பாரம்பரிய பாடசாலை. இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் எதிர்காலத்தில் இவ்வாறு வேறுவேறு துறைகளிலும் சாதனையை புரிய வேண்டும்.


விளையாட்டு துறையாக இருக்கலாம் அல்லது ஏனைய இணை பாடவிதான துறையாக இருக்கலாம் அவற்றில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இணைப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் தமது பிள்ளைகள் படைப்பில் கவனத்தை செலுத்த மாட்டார்கள் என்ற பயமே காரணம். அது ஒரு நியாயமான பயம். 


சாதித்த மாணவர்களே நீங்கள் கல்வியில் பெறும் பெறுபேறுகள்தான் நிச்சயமாக ஏனைய மாணவர்களையும் பங்குபெற்ற செய்யக்கூடிய ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தும்

 என்றார். 10