உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் அதிகரிப்பு, ஏந்தவித நடவடிக்கையும் இல்லை..! நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு
உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் அதிகரிப்பு, ஏந்தவித நடவடிக்கையும் இல்லை..! நா.வர்ணகுலசிங்கம் குற்றச்சாட்டு
தற்போது வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத உள்ளூர் இழுவைமடி தொழில் இடம் பெற்று வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளை கடற்றொழில் மற்றும் நீரியல்துறை அமைச்சருக்கு வழங்கியும் எந்தவிதமான பதிலும் இல்லை எனவும் மீனவர் சமூகம் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இன்று அவர் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
மீனவர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு எவரும் இல்லை என்றும், மீன் பிடி அமைச்சர் மீன்வர்கள் பிரச்சினைகள் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை என்றும், தெரிவித்டுடன் தமிழ் மக்களின் அசரியல் அபிலாசைகளை வென்றெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்றும் தற்போது அரசியல் கட்சிகளின் இணைவு ஓரளவு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.