Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவிழா கால ஆன்மீக அருளுரை..!

 

சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவிழா கால ஆன்மீக அருளுரை..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த திருவிழாவின் 14 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு 

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,

சந்நிதியான் ஆச்சிரமத்தின் நாளாந்த நிகழ்வாக 

“மனிதனுடன் ஆன்மீகமும் உளவியலும்” என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரையினை யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்று பிரதிப்பணிப்பாளர் திருமதி சிறிமேனன் வினோதினி நிகழ்த்தினார்.


சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



இதேவேளை 13 ம் திகதியா நேற்று “சமூக ஒழுங்கு ” என்ற பெரும்பொருளில் ஆன்மீக அருளுரையினை ஆசிரியர் ச. வாகீசன் நிகழ்த்தினார்.