சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக அருளுரை..!
சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக அருளுரை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு
செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த திருவிழாவின் 08ம் நாளான இன்று சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்,
“கந்தபுராணம் காட்டும் வாழ்வியல் ” என்ற தலைப்பில் ஆன்மீக அருளுரையினை சைவப்புலவர் ச.முகுந்தன் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை 05ம்திருவிழா நாளான கடந்த புதன்கிழமை “முருகன் திருவருள் ” என்ற தலைப்பில் ஆன்மீக
அருளுரையினை, திரு ஜெ.துஷாந்தன் அவர்களும்
06ம் நாள் திருவிழாவான கடந்த வியாழக்கிழமை
“உதித்தனன் உலகம் உய்ய ” என்ற தலைப்பில் ஆன்மீக
அருளுரையினை, உப அதிபர் இ.கிருஷ்ணராஜ் அவர்களும், இடம்பெற்றன.
