சதுரங்க போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுவில் பிரதேச இளைஞர் சம்மேளனம்...!
சதுரங்க போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுவில் பிரதேச இளைஞர் சம்மேளனம்...!
நேற்றைய தினம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தினால் வருடம் தோறும் நடத்தப்படும் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட இளைஞர்கள் பயிற்சி நிலையம் கல்லுண்டாயில் நேற்று காலை 9:30 மணியளவில் இடம்பெற்றது.
இப் போட்டியில் பல இளைஞர்கள் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இவ் சதுரங்க போட்டியானது பிரதானமாக ஐந்து சுற்று போட்டிகளை கொண்டு நடைபெற்றது டன் மாவட்ட சம்மேளன சதுரங்க சுற்று போட்டியில் முன்னிலை வகிக்கும் ஆறு வெற்றியாளர்கள் மற்றும் ஒரு மேலதிக வெற்றியாளர் உட்பட ஏழு வீரர்கள் வீராங்கனைகள் தேசிய ரீதியில் இடம் பெற இருக்கும் சதுரங்க போட்டிக்கு செல்லவுள்ளனர்
இவ் வெற்றியாளர்களில் ஆண்களின் முதல் இரண்டு இடத்தினையும் . மற்றும் நான்காம் இடத்தினையும்உடுவில் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் வெற்றி பெற்று தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள சதுரங்க போட்டியில் பங்கு பெற்றுள்ளனர் மற்றும் பெண்களிள் முதல் ஆறு இடங்களில் மூன்று பெண்களும் தெரிவாகிவுள்ளனர் குறிப்பிடத்தக்கது.