வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தினரின் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது....!
வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தினரின் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது....!
வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தினரின் விசேட கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபையின் செம்பியன் பற்று உப பிரிவின் நூலகத்தில் வர்த்தக சங்க தலைவர் திரு.வினோத் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது
இவ் கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தில் புதிய அங்கத்தினர்களை உள்வாங்குவது தொடர்பாகவும் மற்றும் சங்கத்தின் யாப்பு சீரமைப்பு தொடர்பாகவும் சங்கத்தினரின் பண வரவை ஊக்குவிப்பதற்காக நுண் கடன் சேவை தொடர்பாகவும் கலந்துரையாட ப்பட்டதுடன்
மற்றும் வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்க நிர்வாக தெரிவு தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கும் தலைவரால் தெளிவூட்டப்பட்டது
இவ் விசேட கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கத்தினரின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்