Breaking News

தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், காத்தவராயன் வழிபாடு - காத்தவராயன் நாடகம் நூல் வெளியீடும்

 தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், காத்தவராயன் வழிபாடு - காத்தவராயன் நாடகம் நூல் வெளியீடும்




தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், பா. இரகுவரனின் "காத்தவராயன் வழிபாடு - காத்தவராயன் நாடகம்" நூல் வெளியீடும், யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் 01.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். வடமராட்சி அல்வாய் வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தான தம்பிஐயா கலாமணி அரங்கில் இடம்பெற்றது. 


ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் க. பரணீதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தம்பிஐயா கலாமணி அரங்கினை மறைந்த கலாமணி அவர்களின் பாரியார் நாடா வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அரங்கத் திறப்புரையினை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ. பௌநந்தி அவர்கள் ஆற்றினார். 


"காத்தவராயன் வழிபாடு - காத்தவராயன் நாடகம்" நூலின் முதற்பிரதியினை அதன் ஆசிரியர் பா. இரகுவரன்

வெளியிட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர் க. திலகநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் வெளியீட்டுரையினையும் ஆற்றியிருந்தார். 

 

தொடர்ந்து நூல் தொடர்பிலான கருத்துரைகளினை யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி தி. செல்வமனோகரன் அவர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் இ. இராஜேஷ்கண்ணன் அவர்களும் நிகழ்த்தினர். தொடர்ந்து ஏற்புரையினையும் நன்றியுரையினையும் நூலாசிரியர் பா. இரகுவரன் நிகழ்த்தினார். 


தொடர்ந்து யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து நிகழ்வு இரவு 11 மணிவரை சிறப்பாக இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.