Breaking News

தாய்லாந்து கராத்தே சுற்றுப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் J.R. பியன் பெனோவிற்கு வெண்கலப் பதக்கம்

 தாய்லாந்து கராத்தே சுற்றுப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் J.R. பியன் பெனோவிற்கு வெண்கலப் பதக்கம்



தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற "தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி" இன் குழுக்காட்டா பிரிவில் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜோண்றஜீவ் பியன் பெனோ மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.


இவர் இலங்கை கராத்தே தேசிய அணிக்கு தெரிவான முதல் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் என்பதோடு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 18 வயதிற்கு உட்பட்டோருக்கான தைகொண்டோ போட்டியிலும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.