Breaking News

வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு (19)நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம்பெற்றது....!


வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு (19)நேற்றைய தினம் மிக சிறப்பாக இடம்பெற்றது....!




தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவானது நேற்றைய தினம் மாலை 01:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் மயூரன் தலைமையில் நடைபெற்றது.


இவ் நிர்வாக தெரிவு மற்றும் கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்கான புதிய பதிவுகளை செய்த சகல கழகங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். 


விருந்தினர்களாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கிராம நிர்வாக அலுவலர், வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் என்போர் கலந்து கொண்டனர்



நிர்வாக தெரிவில் தலைவராக ஏக மனமாக வி ஜெ நிதர்சனும் செயலாளராக பதவிவாயிலாக வடமராட்சி கிழக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் மயூரனும் பொருளாளராக சயந்தன் அவர்களும் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என தெரிவு செய்யப்பட்டு புதிய சம்மேளனம் அமைக்கப்பட்டது 


இவ் நிர்வாக தெரிவின் பின் புதிய சம்மேளனத்திடம் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டு தலைவர் 

வி ஜெ நிதர்சனின் விசேட உரையுடன் நிறைவு பெற்றது.