Breaking News

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பூவரசங்குளம் ஶ்ரீ பாலமுருகன் அறநெறிப் பாடசாசாலைக்கு சீருடைகள்..!

 சந்நிதியான் ஆச்சிரமத்தால் பூவரசங்குளம் ஶ்ரீ பாலமுருகன் அறநெறிப் பாடசாசாலைக்கு சீருடைகள்..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா பூவரசங்குளம் ஶ்ரீ பாலமுருகன் ஆலய அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற 30 மாணவர்களுக்கு 70,000 ரூபா பெறுமதியான சீருடைகள் நேற்றைய தினம் சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.



குறித்த சீருடைகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அறநெறி பாடசாலைக்கு தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் அறநெறிப் பாடசாலை

ஶ்ரீ பாலமுருகன் ஆலய ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

.