கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய (20) தினம் சிறப்பாக இடம்பெற்றது....!
கரைச்சி பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத் தெரிவு இன்றைய (20) தினம் சிறப்பாக இடம்பெற்றது....!
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான கரைச்சி பிரதேசத்துக்குரிய இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் இன்றய தினம் தினம் காலை 9 மணியளவில் கரைச்சி பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஜெ.சுகந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிர்வாக தெரிவு மற்றும் கலந்துரையாடலில் கரைச்சி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சகல கழகங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
இவ் நிகழ்வில் விருந்தினர்களாக தேசிய இளைஞர் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.ஐ தேவேந்திரன் அவர்களும் தேசிய இளைஞர் மன்றத்தில் கடந்த கால செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் இளைஞர்கள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும், செல்வி கீர்த்திகா மயில் வாகனம் CPR நிறுவனத்தின் கணக்காளர் அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்