ஞானச்சுடர் 328 ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.
ஞானச்சுடர் 328 ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!
யாழ் ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 328 வது மலர் வெளியீடு நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனை தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் காலை 10:45 மணியளவில் இடம் பெற்றது.
இதில் வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம சேவகர் க.ஶ்ரீஸ்கந்தராசா அவர்களும்,
மதிப்பீட்டுரையினை -
பிரபல சட்டத்தரணியும், பதில் நீதவானுமாகிய சோ.தேவரஜா
அவர்களும் நிகழ்த்தினர்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அதனைத் தொடர் காரைநகர்,களபூமி கிராமத்தை சேர்ந்த மருதனார்மடம் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவிக்கும் அச்செழு பகுதியை சேர்ந்த யா/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவிக்கும், சுழிபுரம், பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவிக்கும், வேலனை, 06ம் வட்டாரத்தை சேர்ந்த மாணவி,
பலாலி வடக்கு, வசாவிளான் பகுதியை சேர்ந்த மாணவி,
தெல்லிப்பளை, மாவைகலட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஆகிய அறுவருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.