Breaking News

எரிபொருள் விநியோகஸ்தர்களை சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு !


எரிபொருள் விநியோகத்தர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (4) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத் துணைத் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளனர். 

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த எரிபொருள் விநியோகத்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, எரிபொருள் விநியோகத்தை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சூழ்ச்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்களின் நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் இலஞ்ச ஊழல் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினால் திங்கட்கிழமை (03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.