Breaking News

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படையின் “குதர்”


இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐஎன்எஸ் குதர்” (INS Kuthar) என்ற கப்பல்  மூன்று நாள் விஜயமாக திங்கட்கிழமை (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். 

இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல்  தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டது.