Breaking News

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை: கிலியன் எம்பாப்பே அசத்தல்!

 உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை: கிலியன் எம்பாப்பே அசத்தல்!



உலகக் கிண்ண கால்பந்துத் தொடரின் 'Round of 32' நொக்-அவுட் சுற்றில்,ஸ்வீடன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


குறித்த போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். 


இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பல ஜாம்பவான்களின் சாதனைகளை அவர் தகர்த்துள்ளார்.


உலகக் கிண்ண வரலாற்றில் தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்திய எம்பாப்பே, ஜெர்மனியின் ஜாம்பவான் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை முறியடித்துள்ளார்.


உலகக் கிண்ண Knockout சுற்றுப் போட்டிகளில் மாத்திரம் 10 கோல்களை அடித்து, வரலாற்றிலேயே Knockout சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 


இதன் மூலம் பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ, லியோனிடாஸ் (தலா 8 கோல்கள்) ஆகியோரின் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.


உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 19 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கும் லியோனல் மெஸ்சி, Knockout சுற்றுகளில் 5 கோல்களை மட்டுமே அடித்துள்ளார். 


கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கிண்ண Knockout சுற்றுகளில் இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


#