Breaking News

மனற்காடு பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வு; சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முன்னெடுப்பு!



மனற்காடு பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வு; சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முன்னெடுப்பு!




யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மனற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இன்று காலை 10.30 மணியளவில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.



புளூஸ் அறக்கட்டளை(கனடா) அவர்களின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, பனை வளத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களைப் பெருக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது.



இதன்போது, பனை விதைகள் மற்றும் பயன்தரும் மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடுகை செய்யப்பட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ. ஜெகோபி, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின், மனற்காடு கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்ற இந்நடுகை நிகழ்வு, எதிர்காலத் தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்தது.