Breaking News

கரவெட்டியில் 10,000 பனங்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பம்!


கரவெட்டியில் 10,000 பனங்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பம்!




கரவெட்டிப் பகுதியில் 10,000 பனங்கன்றுகளை நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (19.11.2026) இடம்பெற்றது.

பிளட்ச் றீஸ்ரோ பவுண்டேசன் (பிளட்ச் ரீஸ்டோர் ஃபவுண்டேஷன்) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு, பனை வளத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இயற்கை வளப் பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ. ஜெகோபி மற்றும் சமூக செயற்பாட்டாளர் வீ. சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.



பனை வளத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.