Breaking News

மாவீரர் தின நினைவேந்தலை எவ்வித குழப்பங்களுமின்றி முன்னெடுக்க வேண்டும் – ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கோரிக்கை



மாவீரர் தின நினைவேந்தலை எவ்வித குழப்பங்களுமின்றி முன்னெடுக்க வேண்டும் – ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கோரிக்கை





தமிழ் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக, எவ்வித குழப்பங்களுமின்றி முன்னெடுக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.




மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், இது தொடர்பில் இடம்பெற்ற தென்மராட்சி ஊடக மையத்தின் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



தமிழ் மக்களின் வரலாற்றிலும் தேசிய உணர்விலும் மாவீரர் தினம் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் காணப்படுகின்றது. தமது மண்ணின் விடிவுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூருவது ஒவ்வொரு தமிழரின் உணர்வோடும் தொடர்புடைய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் கோரிக்கை



வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் தேசிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.



தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தவறினால், சிங்கள தேசிய கட்சிகள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்தி உள்நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




தமிழர் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் தேவை குறித்து வலியுறுத்திய அவர், கட்சி வேறுபாடுகள் மற்றும் அரசியல் முரண்பாடுகளைக் கடந்து, தமிழ் மக்களின் நலன் மற்றும் தேசிய அரசியல் இலக்குகளை முன்னிறுத்தி அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.




தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், வடக்கு – கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வலிமையை நிலைநிறுத்துவதற்கும் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிக முக்கியமானது எனவும் வேந்தன் வலியுறுத்தியுள்ளார்.