கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் முதலாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு!
கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் முதலாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு!
கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் முதலாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள ஜெகோவா ஷாலோம் இலவச கல்வி நிலையத்தில் மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பயன்தரும் மரக்கன்றுகள் மற்றும் பூ மரக்கன்றுகள் கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் ஸ்தாபகரும் நகர சபை உறுப்பினருமான ஜெயானந்தம் ஜெயகோபியினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், குறித்த கல்வி நிலைய வளாகம் முழுவதும் நற்பணி மன்றத்தின் தொண்டர்களால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பசுமையான சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கெங்கா தேவி நற்பணி மன்றத்தின் முதலாவது ஆண்டு அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு, சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மன்றம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
