வடக்கிலும் கால்பதித்தது BYD – யாழ்ப்பாணத்தில் புதிய 3S சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கிலும் கால்பதித்தது BYD – யாழ்ப்பாணத்தில் புதிய 3S சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
BYD – யாழ்ப்பாணத்தில் புதிய 3S சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில் நேற்று (11.11.) புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் BYD புதிய வாகன விற்பனை மற்றும் சேவை மையம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில், John Keells CG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சரித் பண்டிதரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அத்துடன், A9 Motors நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. குவைத் மற்றும் திரு. அகிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்வில் பின்வரும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
கிரிஷன் பெர்னாண்டோ ,விற்பனைப் பிரிவுத் தலைவர்.
சதுரங்க கஹவத்த – விற்பனைக்குப் பின்னரான சேவைப் பிரிவுத் தலைவர்.
மினோஷலா நிசங்க – சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர், சச்சித்ர வீரசிங்க – விற்பனையாளர் வலையமைப்பு முகாமையாளர் கலந்து கொண்டனர்.
வாகன விற்பனை, பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி
இலங்கையின் புதிய சக்தி வாகனச் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் BYD, வடமாகாணத்திலும் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய 3S சேவை மையமொன்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது
BYD நிறுவனத்தின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனமும், A9 Motors நிறுவனமும் இணைந்து இந்தச் சேவை மையத்தை நிறுவியுள்ளன.
இதன் மூலம் வடமாகாண மக்களுக்கு BYD வாகனங்களின் விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
BYD நிறுவனத்தின் யாழ்ப்பாணத்திற்கான இந்த விரிவாக்கமானது, A9 Motors நிறுவனத்துடனான கூட்டாண்மையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடமாகாண மக்களின் நீண்டகால வாகனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும் நம்பகமானதுமான சேவைகளை வழங்குவதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், வடபகுதி மக்களுக்கும் இவ்வாறான நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதுடன், விற்பனைக்குப் பின்னரான சேவைகளையும் வலுப்படுத்துவதற்கு இந்தப் புதிய சேவை மையம் பங்களிக்கும் என நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், BYD நிறுவனத்துடன் இணைந்து வடமாகாணத்தில் வாகன விற்பனை மற்றும் சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலம் பிராந்தியத்தின் வாகனப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
