Breaking News

அரசாங்கத்திடம் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் இல்லை" - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

 "அரசாங்கத்திடம் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் இல்லை" - இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!



கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது அரசாங்கமானது தேசிய கல்வி ஆணைக்குழுவை முற்றிலும் புறக்கணித்துச் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வி மறுசீரமைப்பு குறித்து தற்போதைய அரசாங்கத்திடம் முறையான எவ்வித வேலைத்திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார்.


அத்துடன், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, நாட்டிலுள்ள கஷ்ட பிரதேச பாடசாலைகளை மூடிவிடுவதற்கான வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.