Breaking News

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையை மத்திக்கு பறிப்பதற்கு அநுர அரசு திட்டம். மாகாண அதிகாரங்களை ஒழிப்பதே நோக்கம்.கயேந்திரகுமார் பொன்னம்பலம்

 தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையை மத்திக்கு பறிப்பதற்கு அநுர அரசு திட்டம். மாகாண அதிகாரங்களை ஒழிப்பதே நோக்கம்.கயேந்திரகுமார் பொன்னம்பலம் 



நாளை வெள்ளிக்கிழமை மாவட்ட அபிவிருத்தி குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி...


மாகாண அதிகாரங்களை இல்லாமல் ஒழிக்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அனுமதியை இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 


நேற்று வியாழக்கிழமை யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாண அதிகாரங்களை இல்லாமல் ஒழிக்கும் செயற்பாட்டை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.


மாகாண அமைச்சின் கீழ் நிர்வாகிக்கப்பட்டு வருகின்ற தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை திட்டமிட்ட வகையில் மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜாவின் அனுசரணை யுடன் மேற்கொண்டு வருகிறது. 


 நேற்று வியாழக்கிழமை தெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல் இடம் பெற்ற போது அதன் தலைவராக செயல்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையுடன் இணைத்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். 


அவருடைய கருத்து பாரதூரமான ஒரு கருத்தாகும் மாகாண அதிகாரத்தின் கீழ் உள்ள தெல்லிப்பளை வைத்திய சாலையை மத்தியக்கிக் கொண்டு செல்வதன் மூலம் வடக்கில் தமிழ் மக்களிடம் இருக்கின்ற அதிகாரங்களை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் ஒழிப்பதே இதன் திட்டம்.


ஒற்றை ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அதிகாரம் கிடைக்கப் போவதில்லை என நாங்கள் ஏற்கனவே கூறி வருகின்ற நிலையில் மாகாணத்தில் இருக்கின்ற எஞ்சிய அதிகாரங்களையும் பிடுங்கி எடுப்பதே சிங்கள அரசின் தொடர்ச்சியான திட்டமாகும். 


யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் மாகாணத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை விசேட ஏற்பாடுகளின் கீழ் மத்திய அமைச்சர்கள் கொண்டு செல்லுமாறு நானே கோரிக்கை முன்வைத்தேன். 


அதற்கான காரணத்தையும் தெளிவாக கூறியிருந்தேன் மாகாணத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி புற்றுநோய் வைத்திய சாலையை மேம்படுத்துவதற்கோ அல்லது செயல் படுத்துவதற்கோ போதாது. 


 ஆகையால் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற காரணத்தினால் அதனை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்தேன்.


ஆனால் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புற்றுநோய் வைத்திய சாலையை மட்டும் எடுக்க முடியாது அதனுடன் சேர்த்து ஆதார வைத்திய சாலையையும் தர வேண்டுமென அடம் பிடப்பது

 எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.


யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய வைத்தியசாலையாக மாற்றப் போவதாக தெரிவித்த நிலையில் தற்போதைய அரசாங்கம் அது பற்றி மௌனம் காத்து வருகிறது. 


யாழ் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்திய சாலையாக மாற்றினால் தமிழ் மக்களுக்கு சுகாதார வசதி வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்ற நோக்கத்தைக்காக இந்த அரசாங்கம் அதனை நிறைவேற்றாமல் இருக்கிறதா என்ற வலுவான சந்தேகம் இருக்கிறது. 


தற்போதைய அரசாங்கம் அனுராதபுர வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றி யாழ் போதனா வைத்திய சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் திரை மறைவில் இடம் பெற்று வருகின்றன.


யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுராதபுரம் உட்பட கிழக்கு மாகாணத்திலிருந்து பல நோயாளர்கள் சேவை வருவதற்காக வருகை தரும் ஒரு வைத்திய சாலையாக காணப்படுகின்ற நிலையில் தமிழர் பகுதியில் இவ்வாறான ஒரு வைத்திய சாலையை வினைதனனாக செயல்படுத்த முடியாத அளவு முட்டுக்கட்டை போடுகிறார்கள். 


யாழ் போதனா வைத்தியசாலைக்கு தனியான மகப்பேற்று விடுதி இதுவரை அமைக்கப்படாத நிலை தொடரும் நிலையில் வெளிநாட்டு புலம்பெயர் மக்களிடம் இருந்து போதனா வைத்தியசாலைக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது. 


உண்மையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் தாதியா உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்களின் சிறப்பான சேவை காரணமாகவே சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. 


ஆனால் தற்போதைய அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மாகாண வைத்தியசாலைகளை மத்திக்கு பறித்தெடுத்து அவற்றை செயற்பாடு குன்றிய வைத்தியசாலைகளாக மாற்றுவதே திட்டம்.


ஆகவே தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் இந்த விடயத்தை முன்கூட்டியே கூறுவதன் நோக்கம் எமது அதிகாரங்களை திட்டமிட்ட வகையில் சிறிது சிறிதாக பறித்து கேள்வி கேட்க முடியாதவர்களாக மாற்றுவது இவர்களின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்