Breaking News

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் கடற்றொழில் அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

 டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் கடற்றொழில் அமைச்சினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.



காரைநகர் சீ நோர்த் படகு உற்பத்தி நிறுவனத்தில். நேற்று (18) நிகழ்வு நடைபெற்றது.


18 லட்சம் பெறுமதியான 32 வலைகள், முதலாம் கட்டமாகவும், 

86 லட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான 18 படகுகளும் வழங்கப்பட்டன. 


சுமார் 4.80 லட்சம் பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 3 படகுகளும் அதில் நெடுந்தீவிற்கு 2 படகுகளும் , காரைநகருக்கு 1 படகுகளுமாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், அதில் கொக்குளாய் 6, நாயாறு 3, பெரிய கருப்பட்டி 1, அலம்பில் 1 , முகத்துவாரம் 1, செம்மலை 1 பிரதேச மீனவர்களுக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 2 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டன.


படகுகள் மற்றும் வலைகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் உட்பட சீ நோர் தலைவர் வசந்த மான்ன பெரும, மற்றும் சீ நோர் பணிப்பாளர் ரோஹண உள்ளிட்ட யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை பணிப்பாளர் எஸ். அகிலன், மன்னார் , மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பணிப்பாளர்கள், காரைநகர் பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.