Breaking News

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவில் ஈழம் மற்றும் இந்திய கலைஞர்களின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி மற்றும் பொம்மலாட்டம்


கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவில் ஈழம் மற்றும் இந்திய கலைஞர்களின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி மற்றும் பொம்மலாட்டம்






யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத்திருவிழா எதிர்வரும் 20.06.2026 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.




இவ்விழாவை முன்னிட்டு, ஈழம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னணி தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்கள் பங்கேற்கும் விசேட தவில் நாதஸ்வர இசைச்சங்கமம் நள்ளிரவு வரை நடைபெறவுள்ளது.




பங்கேற்கும் முதன்மை வித்துவான்கள்:

நாதஸ்வரக் கலைஞர்கள்: நாதஸ்வர இளவரசன் வட்டூர் N.R. தர்சனன் (சனா), நாதஸ்வர ஸ்வர வேந்தன் நாவலடிபூர் K. கயானன்.



தவில்காரர்கள்: தவில் நாத சொற்கலை வேந்தன் இணுவையூர் பா. நர்மதன் (மது), தவில் சொற்செல்வன் கோண்டாவில் R. சிவகரன், சொற்கவை இளவரசன் ஈழநல்லூர் பிரசாத் சச்சின், தவில் நாத இளவரசன் இணுவையூர் நர்மதன் பிரஜித், இசை நாத இளவரசன் ஈழநல்லூர் சிவதாசன் பவித்ரன்.



இந்தியக் கலைஞர்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்துவான்களான V. சரவணன் மற்றும் S. சரவணன் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.





இவ்விழாவின் மற்றுமொரு விசேட அம்சமாக, சிந்துபுரம் நாகப்பூ ஆற்றுகை கலைஞர்கள் வழங்கும் பாரம்பரிய "பொம்மலாட்ட" கலைநிகழ்ச்சியும் பக்திப்பூர்வமாக மேடையேற்றப்படவுள்ளது.





இவ்விழாவினை 7ஆம் திருவிழா உபயகாரர்கள் செம்மையான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். விழாவிற்கான ஒலியமைப்பு மற்றும் ஒளியமைப்பினை கச்சாய் K.K.A Sounds, Lights நிறுவனம் வழங்கவுள்ளது. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயகாரர்கள் அனைவரும் "அனைவரும் வருக, கண்ணகி அம்மன் அருள் பெறுக" என பக்திபூர்வமாக அழைக்கின்றனர்.