பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் சற்றுமுன் தீ பரவல், கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்துத்துறை பிரதேச சபை...!
பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் சற்றுமுன் தீ பரவல், கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்துத்துறை பிரதேச சபை...!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கும் வலிக்கண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேச சபையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த பகுதியில் விசாமிகளால் சம்புப் புற் தரவைக்கு தீ வைக்கப்படட நிலையில் அது பாரிய தீயாகப் பரவி ஏற்பட்ட புகையால் வீதியின் போக்கு வரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை கட்டுப்படுததும் நடவடிக்கையில் பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டுதற்போது அது கட்டுக்குள் வந்துள்ளது.
வரட்சியான காலத்தில் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் தீப் பரவல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது
