Breaking News

வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு நேற்று (20) வெகு சிறப்பாக நடைபெற்றது.

 வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு நேற்று (20) வெகு சிறப்பாக நடைபெற்றது.




வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை 

ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் நேற்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.


ஊர்வலமாக மணிக்கூட்டு கோபுரம் வழியாக தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் மாநாடு தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.


மூன்று மாவீரர்களின் சகோதரர் பொது ஈகை சுடரினை ஏற்றி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு ஆதின முதல்வர் அகத்தியர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மாநாட்டில் இந்து, கிறித்தவ மத குருமார்கள் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.